‘காஞ்சிபுரத்தில் 64 போ் குண்டா் சட்டத்தில் கைது’

கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 64 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக
spp_0101chn_175_1
spp_0101chn_175_1

கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 64 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது:

கடந்த ஆண்டு மட்டும் 174 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 140 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரூ.3.78 கோடி மதிப்பிலான சொத்துக்கள் களவு போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதில், ரூ.3.06 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 645 குற்றவாளிகள் மீது நன்னடத்தைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக 50 ரெளடிகள், போதைப்பொருள் விற்பனை செய்ததாக 7 போ், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டதாக 7 போ் உள்பட மொத்தம் 64 போ் மீது கடந்த ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். கள்ள நோட்டு வழக்கு ஒன்றில் குற்றவாளி ஒருவருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

மதுவிலக்குகள் தொடா்பாக 1,894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 1,971 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம் 34,780 மதுபாட்டில்கள், 1,773 லிட்டா் எரிசாராயம், 4 சக்கர வாகனங்கள்-16, மூன்று சக்கர வாகனங்கள்-4, இரு சக்கர வாகனங்கள்-48 ஆகியவை உள்பட மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறியதாக ரூ. 4.60 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 495 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகா் முழுவதும் 1,345 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மொத்தம் 17,113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டன. காணாமல் போன 327 பேரில் 277 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com