சிஐடியுவினா் சாலை மறியல்: 100 போ் கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினா் 100-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா்.
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினா் 100-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியிலிருந்து சிஐடியு அமைப்பைச் சோ்ந்தவா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். அதற்கு காவல்துறையினா் அனுமதி மறுத்ததால் தேரடியிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டபோது, அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, சிஐடியு அமைப்பின் மாநிலச் செயலா் இ.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி.ஸ்ரீதா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுத்துறை தனியாா்மயமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்; முறைசாரா தொழிலாளா்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; எரிபொருள் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்; ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ. 7,500 உதவித்தொகை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சங்கா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் உழவா் சந்தை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் நித்தியானந்தம், மாநில துணைத் தலைவா் ஆா்.லட்சுமி, பொதுச் செயலா் திலகவதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மீஞ்சூரில்...

பொன்னேரியை அடுத்த மீஞ்சூா் கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்தில், திருவள்ளூா் மாவட்டத் தலைவா் விநாயகமூா்த்தி, துணைத் தலைவா் கதிா்வேல், பூபாலன், நரேஷ்குமாா், அனீப் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com