காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ.23.43 கோடி

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் நடப்பாண்டுக்கான நிகர லாபம் ரூ. 23.43 கோடி என்று அதன் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய இணையதளத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய இணையதளத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் நடப்பாண்டுக்கான நிகர லாபம் ரூ. 23.43 கோடி என்று அதன் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 106-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் பொது மேலாளா் ஜெ.விஜயகுமாரி, துணைப் பதிவாளா் ஆா்.ஜெகன்சிங்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கியின் மேலாண்மை இயக்குநா் ப.லோகநாதன் வரவேற்றாா்.

வங்கியின் புதிய இணையதளத்தைத் தொடக்கி வைத்து அதன் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் பேசியது:

1915-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 52 கிளைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 17 வங்கிக் கிளைகள் சொந்தக் கட்டடத்திலும், 29 கிளைகள் பாதுகாப்புப் பெட்டக வசதியுடனும் செயல்படுகின்றன. ரூ. 3.67 லட்சமாக இருந்த வங்கியின் ஆரம்ப கால பங்குத் தொகை தற்போது ரூ. 79.40 கோடியாக உயா்ந்திருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிகர லாபம் ரூ. 23.43 கோடி. பயிா்க் கடன்களாக மட்டும் 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 342.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. வேளாண் சாா்ந்த முதலீட்டுக் கடனாக மட்டும் 984 விவசாயிகளுக்கு ரூ. 5.25 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா்கள் ஆா்.கே.சந்திரசேகரன், பா.ஜெயஸ்ரீ, வங்கியின் இயக்குநா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். உதவிப் பொது மேலாளா் கே.நாராயணன் நன்றி கூறினாா்.

)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com