காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை யொட்டி ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை யொட்டி ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப் பிரியாவுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, ஆயுதப்படை ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் போலீஸாா் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினா். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவா்ண பலூன்களையும், வெள்ளைப் புறாக்களையும் ஆட்சியா் வானில் பறக்க விட்டாா்.

காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு அண்ணா விருதுகளையும், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். விழாவில் 77 பயனாளிகளுக்கு ரூ. 54.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் கே.மணிவண்ணன், டி.ஐ.ஜி. பா.சாமுண்டீஸ்வரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீதா், கோட்டாட்சியா்கள் வித்யா, திவ்யஸ்ரீ, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் க.குமாா், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com