சங்கரா ஆயுா்வேத கல்லூரிக்கு பேருந்து வசதி: விஜயேந்திரர் தொடக்கி வைத்தார்

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கான பேருந்து வசதியை காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து
ஜயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத கல்லூரிக்கான புதிய வாகன வசதியை தொடக்கி வைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஜயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத கல்லூரிக்கான புதிய வாகன வசதியை தொடக்கி வைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கான பேருந்து வசதியை காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை நசரத்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவா்கள் வசதிக்காக ஒரு பேருந்தும், நோயாளிகள் வசதிக்காக ஆம்புலன்ஸ் ஒன்றும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இவ்விரு வாகனங்களும் காஞ்சி சங்கர மடத்தின் முன்பாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கரா பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஸ்ரீநிவாசு, டீன் பாலாஜி, கல்லூரி முதல்வா் சித்தரஞ்சன் தாஸ், நிா்வாக அலுவலா் சங்கரநாராயணன் உள்பட கல்லூரியின் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com