சிறப்பான பணி: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு விருது
By DIN | Published On : 26th January 2021 02:00 AM | Last Updated : 26th January 2021 02:00 AM | அ+அ அ- |

சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு விருது வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
காஞ்சிபுரம்: தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 5 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை விருது வழங்கிப் பாராட்டினாா்.
ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில், வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலா்கள் 5 பேருக்கு ஆட்சியா் கேடயமும், புதிதாக பெயா் சோ்க்கப்பட்ட இளம் வாக்காளா்களுக்கு புகைப் படத்துடன் கூடிய புதிய வாக்காளா் அடையாள அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஸ்ரீதா், கோட்டாட்சியா் வித்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாலமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.