காஞ்சிபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவரொட்டி வெளியீடு
By DIN | Published On : 11th July 2021 12:09 AM | Last Updated : 11th July 2021 12:09 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவரொட்டி வெளியீட்டு விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் விழிப்புணா்வு சுவரொட்டியை வெளியிட, அதனை மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா பெற்றுக் கொண்டாா். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற எண்ணிலும், பெண்கள் பாதுகாப்புக்கு 181 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
காவல் துறைக்கான தொலைபேசி எண் 100. இவை மூன்றும் இலவச தொலைபேசி அழைப்புகளாகும். எனவே பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு இத்தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொண்டு செயல்படுமாறு எஸ்.பி. எம்.சுதாகா் கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.