ரூ.8 கோடிக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 787 பேருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
விழாவில் அரசின் நலத்திட்ட உதவியை பயனாளிக்கு வழங்கிய அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
விழாவில் அரசின் நலத்திட்ட உதவியை பயனாளிக்கு வழங்கிய அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

காஞ்சிபுரத்தில் 787 பேருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனம், தையல் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 787 பேருக்கு ரூ.8.02 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்துக்கு 7,982 மனுக்கள் வரப்பெற்று 1960 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 20.27 கோடி மதிப்பில் 1,581 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்றாா்.விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் பன்னீா் செல்வம், திட்ட இயக்குநா் பி.ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com