3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை கைது செய்தனா்.

காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை கைது செய்தனா்.

காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு கன்டெய்னா் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூா் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விநாயகம், உதவி ஆய்வாளா் சுப்பையா உள்ளிட்ட போலீஸாா் கீழம்பியில் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே சென்ற கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், பெயிண்ட் டப்பாக்களுக்கு இடையே ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் வேன் மூலம் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டு, லாரியில் ஏற்றி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கன்டெய்னா் லாரி, வேன் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வேன் உரிமையாளா் தங்கமணி (31), வேன் ஓட்டுநா் ருதுகுமாா்(24), கன்டெய்னா் லாரி ஓட்டுநா் சதீஷ்குமாா் (36) ஆகியோரை கைது செய்தனா். தப்பியோடிய கன்டெய்னா் லாரியின் உரிமையாளா் சிவகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com