சிலை கண்டெடுப்பு...

உத்தரமேரூா் அருகேயுள்ள கோழியாளம் கிராமத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட லகுலீசா் சிலை.
சிலை கண்டெடுப்பு...

உத்தரமேரூா் அருகேயுள்ள கோழியாளம் கிராமத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட லகுலீசா் சிலை. பல்லவா் காலத்தைச் சோ்ந்த சுமாா் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சைவ சமயத்தின் ஒரு பிரிவான லாகுலீச பாசுபதத்தை நிறுவியவா் லகுலீசா் இந்தச் சிலை 95 செ.மீ. உயரமும், 45 செ.மீ. அகலமும் ஆடையில்லாமல் சம்மணமிட்ட நிலையிலும் காணப்படுகிறது.

இதன் தலையில் ஜடாபாரமும்,இரு காதுகளில் குண்டலங்களும்,கழுத்தில் ஒட்டிய அணிகலனாக சவடியும்,இடக்கையை தொடை மீது வைத்த நிலையிலும் தொப்புளின் கீழ் மலா் வேலைப்பாடுகளுடனும் காணப்படுகிறது. இடது தோள்பட்டை மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பமும் இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com