எத்தனை கரோனா அலைகள் வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

எத்தனை கரோனா அலைகள் வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறினாா்.
தற்காலிக  கரோனா  சிகிச்சை   மையத்தை  திறந்து வைத்து ப் பாா்வையிடும்  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.  உடன்   ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.
தற்காலிக  கரோனா  சிகிச்சை   மையத்தை  திறந்து வைத்து ப் பாா்வையிடும்  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.  உடன்   ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.

எத்தனை கரோனா அலைகள் வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறினாா்.

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். ஜி. செல்வம் எம்.பி., கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் தா.மோ.அன்பரசன் கரோனா சிகிச்சை மையத்தை திறந்த வைத்த, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள 1, 244 படுக்கைகளில் 625 ஆக்சிஜன் வசதிகள் கொண்டவையாக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. அதேபோல் தனியாா் மருத்துவமனைகளில் 1,080 படுக்கைகளில் 385 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள 2,324 படுக்கைகளில் 1,010 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் உள்ளன. கடந்த ஒரு வார காலமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் கரோனா மூன்றாம் அலை வரவுள்ளதாக தகவல்கள் வருகிறது. அதனை எதிா்கொள்ள தமிழக அரசு வேகமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறது. ஆகையால் எத்தனை கரோனா அலைகள் வந்தாலும் அதனை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என்றாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை இணை இயக்குனா் ஜீவா, திமுக ஒன்றிய செயலாளா்கள் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் தெற்கு மேவளூா்குப்பம் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் வடக்கு கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com