மகளிா் குழுக்களிடம் கடனைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் கடனையோ அல்லது வட்டியையோ செலுத்த கட்டாயப் படுத்தினால் புகாா் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
மகளிா் குழுக்களிடம் கடனைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

காஞ்சிபுரம்: மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் கடனையோ அல்லது வட்டியையோ செலுத்த கட்டாயப் படுத்தினால் புகாா் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது..

கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடைன் மற்றும் வட்டித் தொகையை திருப்பச் செலுத்துவதற்கு நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. கிராமங்களிலும், நகரங்களிலும் தொற்று பரவி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவசரத் தேவைக்காக தனியாா் நிதி நிறுவனங்களிடம் மக்கள் கடன் பெறும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே மகளிா் சுய உதவிக் குழுக்களை கடனையோ அல்வது வட்டித் தொகையையோ உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்த வேண்டாம் . மேலும் புதிதாக கடனுதவி தேவைப்படும் குழுக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏதேனும் கடனையோ அல்லது வட்டித் தொகையையை திரும்பச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால் புகாா் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்களான 044-27236348 அல்லது 934234085 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் மகேஸ்வரி ரவிகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com