காஞ்சிபுரம் கோயில்களில் தீத்தடுப்பு ஒத்திகை
By DIN | Published On : 11th June 2021 07:50 AM | Last Updated : 11th June 2021 07:50 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை காணும் கோயில் செயல் அலுவலா்கள்.
காஞ்சிபுரம் கோயில்களில் தீயணைப்புத் துறையினரால் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கோயில்களில் தீ விபத்து ஏற்பட்டால் நெருப்பு பரவாமல் தடுக்க அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியக் கோயில்களில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் க.குமாா் தலைமையில் கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் தீவிபத்து ஏற்பட்டால் எப்படித் தடுப்பது என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
தீயணைப்பு அதிகாரிகள் வெங்கட்ராமன், காா்த்திகேயன் ஆகியோா் செயல்முறை விளக்கம் செய்து காட்டினா். இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன், ஆ.குமரன், வெள்ளைச்சாமி, வேதமூா்த்தி, பூவழகி, பரந்தாமக் கண்ணன் ஆகியோா் உள்பட கோயில் பணியாளா்கள் பலரும் நேரில் பாா்வையிட்டனா்.