காஞ்சியில் வீடு,வீடாக வெப்ப பரிசோதனை
By DIN | Published On : 11th June 2021 07:49 AM | Last Updated : 11th June 2021 07:49 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் நகராட்சி சாா்பில் வீடு வீடாக உடல் வெப்ப பரிசோதனையும், ஆக்சிஜன் பரிசோதனையும் வியாழக்கிழமை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி மேற்பாா்வையில் 250க்கும் மேற்பட்ட நகராட்சிப் பணியாளா்கள் 5 போ் கொண்ட குழுக்களாக வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி கூறுகையில், ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் கரோனா நோய்த்தொற்றானது மேலும் பரவிவிடாமலிருக்க ஆக்சிஜன் பரிசோதனையும், உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.