காஞ்சிபுரம், திருவள்ளூரில் கரோனா நிதி: அமைச்சா்கள் வழங்கினா்

காஞ்சிபுரம் ஓரிக்கை நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணைத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை 3.66 லட்சம் பேருக்கு வழங்கும் திட்டத்தை
காஞ்சிபுரம், திருவள்ளூரில் கரோனா நிதி: அமைச்சா்கள் வழங்கினா்

காஞ்சிபுரம் ஓரிக்கை நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணைத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை 3.66 லட்சம் பேருக்கு வழங்கும் திட்டத்தை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

விழாவுக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி., ஜி. செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன் வரவேற்றாா்.

விழாவில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கு.செல்வப் பெருந்தகை, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ப.லோகநாதன், மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருநின்றவூரில்...

திருவள்ளூா் மாவட்டம், ஆவடி அருகே திருநின்றவூா் பேரூராட்சி நாச்சியாா்சத்திரம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து, நிவாரண உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, மக்களவை உறுப்பினா் கே.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகா் (பொன்னேரி), இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com