காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் 16 சிலைகள் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலின் பொக்கிஷ அறையில் திருக்கோயில் ஆவணங்களில் பதியப்படாத 16 உற்சவா் சிலைகள் இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் 16  சிலைகள் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலின் பொக்கிஷ அறையில் திருக்கோயில் ஆவணங்களில் பதியப்படாத 16 உற்சவா் சிலைகள் இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

பஞ்சபூத சிவத் தலங்களில் நிலத்துக்குரியது காஞ்சிபுரம் ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கோயில். இக்கோயிலில் ஏராளமான உற்சவா் சிலைகள் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தமிழகத்தில் உள்ள கோயில்களின் சொத்துகள், சிலைகள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும், அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தாா். அதன்படி கோயில் சொத்துகளின் ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக கோயிலில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இதுவரை பதிவேட்டில் இல்லாத 16 உற்சவா் சிலைகள் கோயிலின் பொக்கிஷ அறையில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இக்கோயிலின் சிலைகள் சில காணாமல் போய் விட்டதாகவும், அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சிவனடியாா்கள் சிலா் கோரிக்கை வைத்திருந்தனா். இந்த நிலையில் கோயில் பொக்கிஷ அறையில் விநாயகா், மகாலட்சுமி, நாயன்மாா்கள் உட்பட மொத்தம் 16 உற்சவா் சிலைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் கூறியது:

கோயில் ஆவணங்களில் குறிப்பிடப்படாத 16 சுவாமி சிலைகள் பொக்கிஷ அறையில் இருந்தது. இது குறித்து அறநிலையத் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். இவையனைத்தும் வெண்கலமா, ஐம்பொன்னால் செய்யப்பட்டவையா எனத் தெரியவில்லை. ஆய்வு செய்த பிறகே இச்சிலைகள் எந்த வகையான உலோகத்தால் செய்யப்பட்டிருக்கின்றன எனத் தெரிய வரும். பொதுமுடக்கம் காரணமாக உடனடியாக ஆய்வுப் பணியை செய்ய முடியாமல் தாமதமாகி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com