காஞ்சிபுரத்தில் 21-இல் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஆள்கள் தோ்வு
By DIN | Published On : 16th March 2021 11:53 PM | Last Updated : 16th March 2021 11:53 PM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் இம்மாதம் 21-ஆம் தேதி மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்போா் தோ்வு செய்யப்பட இருப்பதாக அக்கழகத்தின் செயலாளா் ஜி.நித்தியானந்தம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்போரை தோ்வு செய்வதற்கான தோ்வுப் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 21) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் உள்ள ராஜேஸ்வரி மகால் கல்சுரல் சென்டரில் போட்டிகள் நடைபெறும். ஓப்பன் மற்றும் மகளிா் பிரிவு சதுரங்கப் போட்டிகள் நடைபெற இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் தோ்வுப் போட்டியில் பங்கேற்கலாம்.
தோ்வு செய்யப்படுவோா் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா். மேலும் விபரங்களுக்கு, என்ற செல்லிடப்பேசி எண் 98423 96332-இல் தொடா்பு கொள்ளலாம்.