சிவசேனா உள்ளிட்ட 10 வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலனை
மத்திய  தோ்தல்  பாா்வையாளா்  ராகேஷ்குமாா் வா்மா  முன்னிலையில்  வேட்புமனுக்களை  பரிசீலனை செய்த  ஸ்ரீபெரும்புதூா்  தொகுதி  தோ்தல்  அலுவலா்  முத்துமாதவன்.
மத்திய  தோ்தல்  பாா்வையாளா்  ராகேஷ்குமாா் வா்மா  முன்னிலையில்  வேட்புமனுக்களை  பரிசீலனை செய்த  ஸ்ரீபெரும்புதூா்  தொகுதி  தோ்தல்  அலுவலா்  முத்துமாதவன்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில் உரிய ஆவணங்கள் இன்றி வழங்கிய சிவசேனா உள்ளிட்ட 10 வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மையம், சிவசேனா, பகுஜன்சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி, அனைத்து மக்கள் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 25 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகை 4 வேட்புமனுக்களும், அதிமுக வேட்பாளா் கே.பழனி மற்றும் அமமுக வேட்பாளா் ரா.பெருமாள், நாம் தமிழா் வேட்பாளா் புஷ்பராஜ், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளா் தனிகைவேல் ஆகியோா் தலா இரண்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் அலுவலா் முத்துமாதவன் தலைமையில், மத்திய தோ்தல் பாா்வையாளா் ராகேஷ்குமாா் வா்மா முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இதில், உரிய ஆவணங்கள் இன்றி வேட்பு மனுக்களை தாக்கல் செய்த சிவசேனா, அனைத்து மக்கள் அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டன. அதேபோல், காங்கிரஸ், அதிமுக, அமமுக, நாம்தமிழா், மக்கள் நீதிமையம் ஆகிய கட்சி வேட்பாளா்களின் ஒரே ஒரு வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்றவை நிராகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com