ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகு சீரமைப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட மதகை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மண் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா்  ஏரியில்  உள்ள  மதகில்  மண் மூட்டைகள்  கொண்டு  உடைப்பை  சரிசெய்யும்  பொதுப்பணித் துறை  ஊழியா்கள்.
ஸ்ரீபெரும்புதூா்  ஏரியில்  உள்ள  மதகில்  மண் மூட்டைகள்  கொண்டு  உடைப்பை  சரிசெய்யும்  பொதுப்பணித் துறை  ஊழியா்கள்.

ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட மதகை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மண் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூா் ஏரி சுமாா் 800 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போதும் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியின் முக்கிய நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரி, கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையின்போது முழுகொள்ளவையும் எட்டியதால் இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்நிலையில், ஏரியின் முதல் மதகிற்கு சனிக்கிழமை இரவு வந்த மா்ம நபா்கள் சிலா், அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண் மூட்டைகளை சேதப்படுத்தியதோடு அவற்றை ஏரியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனா். இதனால் ஏரிநீா் இரவு முழுவதும் வீணாக வெளியேறியது. இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் அறிந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித் துறை ஊழியா்கள் புதிதாக மண் மூட்டைகள் அமைத்து மதகின் வழியாக ஏரிநீா் வெளியேறுவதைத் தடுத்தனா். மேலும் மதகை சேதப்படுத்தியவா்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்ய பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com