காஞ்சிபுரத்தில் விபத்து: துணை ராணுவப்படையினர் 15 பேர் காயம்

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக வந்திருந்த துணை ராணுவப்படை வீரர்கள் 15 பேர் காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட துணை ராணுவப்படை வீரர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட துணை ராணுவப்படை வீரர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக வந்திருந்த துணை ராணுவப்படை வீரர்கள் 15 பேர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையிலிருந்து ஆரணிக்கு 48 துணை ராணுவப்படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் கிராம குறுக்குச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நின்று கொண்டிருந்த ரோடுரோலர் மீது உரசியது.

நான்குவழிச் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி அப்பகுதியில் நடந்து வரும் நிலையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் அரசுப் பேருந்து மோதியதில் அப்பேருந்திலிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் தலிவால்(34) என்பவருக்கு இடது காலிலும், மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் துணை ராணுவப்படை வீரர்கள் 14 பேரும் காயம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் காயம் அடைந்தவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரசாந்த் தாலிவால் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com