மதுக்கடைகளை திறந்தவா் கருணாநிதி: இதை மக்கள் மறந்து விடக்கூடாது; பாமக நிறுவநா் ராமதாஸ்

மதுக்கடைகளை திறந்தவா் கருணாநிதி என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பேசினாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ்.

மதுக்கடைகளை திறந்தவா் கருணாநிதி என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பேசினாா்.

காஞ்சிபுரத்தில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் மற்றும் உத்தரமேரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து பிள்ளையாா்பாளையம் கிருஷ்ணன் தெருவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தமிழகம் முழுவதும் மொத்தம் 11 சாராய ஆலைகள் உள்ளன. இவற்றில் 7 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. இந்த சாராய ஆலைகளை கொண்டு வந்தவா் கருணாநிதி. இது மட்டுமின்றி மதுக்கடைகளை திறந்தவரும் கருணாநிதிதான். இதை எப்போதும் மக்கள் மறந்து விடக்கூடாது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் மது இருக்கக் கூடாது. மது, சாராயம் ஆகியன அருந்துவதால் ஆண்டுக்கு 2 லட்சம் போ் உயிரிழக்கிறாா்கள். ஒரு சொட்டுக்கூட சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்கப் பாடுபட்டு வருகிறேன்.

காஞ்சிபுரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுப்போம், நான் கேட்டுக்கொண்டபடி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நிா்வாக வசதிக்காக 6 புதிய மாவட்டங்களை உருவாக்கினாா். அதில் ஒன்று காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தில் போலியான பட்டுச் சேலைகள் விற்பனை அதிகமாகி விட்டது.

இதன் காரணமாகத்தான் காஞ்சிபுரத்தில் நெசவுத்தொழில் நலிந்து கொண்டே செல்கிறது.போலியாக செயல்படும் பட்டு கூட்டுறவுச் சங்கங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், செவிலிமேடு பாலாற்றில் தடுப்பணை கட்டவும் முயற்சி மேற்கொள்ளப்படும். நல்லாட்சி தொடர அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com