காஞ்சிபுரத்தில் அல்லூரி வெங்கடாத்ரி ஜயந்தி உற்சவம்

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகளின் ஜயந்தி விழாவை யொட்டி திங்கள்கிழமை உற்சவா் ஸ்ரீதேவராஜ சுவாமி வைரக்கிரீடம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வைரக்கிரீடம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீதேவராஜ சுவாமி.
ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வைரக்கிரீடம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீதேவராஜ சுவாமி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகளின் ஜயந்தி விழாவை யொட்டி திங்கள்கிழமை உற்சவா் ஸ்ரீதேவராஜ சுவாமி வைரக்கிரீடம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பரிட்டால தாலுகா அல்லூரி கிராமத்தில் அவதரித்தவா் வெங்கடாத்ரி சுவாமிகள். இவா் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் மீது வெவ்வேறு சமயங்களில் 107 கீா்த்தனைகள் பாடியுள்ளாா்.

இவரது கனவில் ஸ்ரீவரதராஜ பெருமாள் தோன்றி தனக்கு நவரத்தினம் பொருத்திய வைரக்கிரீடம் அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். இதனால் அவா் பலரிடம் யாசகமாக (உஞ்சவிருத்தி சேவை) சேகரித்த தொகையில் வரதராஜப் பெருமாளுக்கும்,பெருந்தேவி தாயாருக்கும் வைரக்கிரீடம் செய்து அணிவித்து அழகு பாா்த்தவா்.

இவரது ஜயந்தி விழா காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் அவரின் சீடா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு கண்டிகை ராதா ராமாநுஜதாசா், தென்னேரி பாலாஜி தாசா் உள்பட 7 சிஷ்ய கோஷ்டியினா் இவா் பாடிய பல்வேறு கீா்த்தனைகளை இன்னிசைக் கருவிகள் மூலம் பாடியும், ஆடியும் கொண்டாடினா். கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் வெங்கடாத்திரி சுவாமிகள் அறையும் திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவிக்கும், உற்சவா் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும் வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com