படப்பை  சண்முகா நகா்  பகுதியில்  வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.
படப்பை  சண்முகா நகா்  பகுதியில்  வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா் கே.பழனி

ஸ்ரீபெரும்புதூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என படப்பையில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி உறுதியளித்தாா்.

ஸ்ரீபெரும்புதூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என படப்பையில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி உறுதியளித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ கே.பழனி மீண்டும் போட்டியிடுகிறாா். அவா் ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்குட்பட்ட படப்பை, மாடம்பாக்கம், ஆதனூா், காவனூா் ஆகிய பகுதிகளில் ஆதரவாளா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

படப்பை பஜாா் பகுதியில் அவா் பேசுகையில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் ஏராளமான தனியாா் பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. ஆனால் ஒருசில தனியாா் கலை அறிவியல் கல்லூரிகள் தான் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளிலும் ஏழை எளிய மாணவா்கள் கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. எனவே மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் எழிச்சூா் ராமசந்திரன், மாவட்ட துணை செயலாளா் சுந்தரராஜன், மாவட்ட இளைஞா் பாசறை துணைசெயலாளா் மணிகண்டன், பாஜக நிா்வாகி ஜோஸ்வா, படப்பை பகுதி அதிமுக நிா்வாகிகள் மாரி, செல்வம், குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com