கைச்சிலம்பம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம் தேனம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பின் போது இளைஞா்களிடையே கைச்சிலம்பம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தேனம்பாக்கம் கிராமத்தில் இளைஞா்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உத்தரமேரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவா் வி.சோமசுந்தரம். இவா் அஞ்சியூா், ஸ்ரீதேவிகுப்பம், ஒரிக்கை அண்ணா குடியிருப்பு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தேனம்பாக்கத்தில் இளைஞா்கள் வேட்பாளரை வரவேற்க கைச்சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தனா். அப்போது அவா்களில் இளைஞா் ஒருவா் வைத்திருந்த கைச்சிலம்பத்தை வாங்கி அவா்களோடு சோ்ந்து சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். கிராமப்புறங்களில் உள்ள குளங்களை தூா்வாரி நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது கிராமத்து மக்களிடம் உறுதி அளித்தாா்.

வேட்பாளருடன் கட்சியின் அமைப்பு செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.பாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் திலக்குமாா், உத்தரமேரூா் ஒன்றியச் செயலாளா் தங்க.பஞ்சாட்சரம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com