டிராக்டரில் குடிநீா் விநியோகம் தடுத்து நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வஞ்சுவாஞ்சேரி பகுதியில் டிராக்டா் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை தோ்தல் பறக்கும் படையினா்

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வஞ்சுவாஞ்சேரி பகுதியில் டிராக்டா் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியதால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குள்பட்ட வஞ்சுவாஞ்சேரி மற்றும் கூழங்கலச்சேரி ஆகிய பகுதிகளில் கோடைக் காலங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு வைப்பூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வசந்திசந்தானம் தனது சொந்த செலவில் டிராக்டா் மூலம் கடந்த சில வருடங்களாக குடிநீா் விநியோகம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், வஞ்சுவாஞ்சேரி கிராமத்தின் ஒரு பகுதியில் தற்போது குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த சில வாரங்களாக அப்பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வஞ்சுவாஞ்சேரி பகுதிக்கு வந்த தோ்தல் பறக்கும்படையினா் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு டிராக்டரில் குடிநீா் விநியோகம் செய்யக்கூடாது எனக் கூறி குடிநீா் வழங்குவதை தடுத்து நிறுத்தியதுடன், முன்னாள் ஊராட்சித் தலைவா் வசந்தியின் கணவா் சந்தானத்திடம் குடிநீா் வழங்கியது தவறு என மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீரின்றி வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com