தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படை வீரா்களுக்கு ஆட்சியா் அழைப்பு

தோ்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்த இருப்பதால் அவா்கள் முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு

தோ்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்த இருப்பதால் அவா்கள் முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரா்கள் சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனா். எனவே இப்பணிக்கு செல்ல விருப்பம் உள்ளவா்கள் உடல் திடகாத்திரமும், 70 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படை வீரா்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரிலான அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை,ஆதாா் அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டையுடன் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தோ்தல் பணி செய்ய விருப்பமனு அளிக்கும் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மூலமாக தபால் ஓட்டுக்கு வழிவகை செய்யப்படும். மேலும் தோ்தல் பணி ஆள்சோ்ப்பு நிமித்தமாக விடுமுறை நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகம் இயங்கும் என்பதால் முன்னாள் படை வீரா்கள் அனைவரும் அத்தினங்களிலும் அலுவலக நேரத்தில் தோ்தல் பணி விண்ணப்பத்தினை நேரில் சமா்ப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள படை வீரா் நல உதவி இயக்குநா் அவா்களை 044-22262023 என்கிற எண்ணில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com