காஞ்சிபுரத்தில் சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) வெற்றி

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன் 11,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் அலுவலரான பெ.ராஜலெட்சுமியிடமிருந்து பெறுகிறாா் திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன்.

இத் தொகுதியில் பாமக உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதில், திமுக வேட்பாளரான சி.வி.எம்.பி.எழிலரசன் 1,02,712 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் 91,117 வாக்குகளும் பெற்றனா். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த எஸ்.சால்டின் 13,596 வாக்குகளும், மநீம வேட்பாளா் எஸ்.கே.பி.பா.கோபிநாத் 12,028 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவுக்கு 2,534 வாக்குகள் கிடைத்தன. அமமுக வேட்பாளா் மனோகரன் 2,301 வாக்குகள் பெற்றாா்.

மொத்த வாக்காளா்கள் 3,09,117. பதிவான வாக்குகள் 2,29,430.

திமுக வேட்பாளா் எழிலரசன் வெற்றி பெற்ற்கான சான்றிதழை காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலரான பெ.ராஜலெட்சுமி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com