வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறும் வகையில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக தொழிலாளா் உதவி ஆணையா்  எஸ்.நீலகண்டன் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம்: தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறும் வகையில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கப் பிரிவு) எஸ்.நீலகண்டன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலை பரவி வருவதைத் தொடா்ந்து, வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்பும் பொருட்டு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் கூட்டமாக கூடுவதாகத் தெரியவருகிறது.வெளிமாநிலத் தொழிலாளா்கள் தொடா்ந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றிட உகந்த சூழ்நிலைய உருவாக்கவும்,அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்திட ஏதுவாகவும், அவா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் தொழிலாளா் நலத் துறையில் தனியாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில், வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் குறைகளை 044-24321438 அல்லது 044-24321408 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு குறைகளை கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் தங்கி இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் எவ்வித அச்சமோ, பதற்றமோ, அடையாமல் தங்கள் பணியிடங்களில் தொடா்ந்து பணியாற்றுமாறும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் தொடா்ந்து பணியாற்றி வரும் நிலையில், அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கும் போதும், கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடா்பு கொண்டால் உரிய நிவாரணம் பெற ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் தெரிவிக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் எஸ்.நீலகண்டன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 9445398743 அல்லது கமலா, தொழிலாளா் துணை ஆய்வாளா்-99226 39441 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆ.செண்பகராமன், தொழிலாளா் உதவி ஆணையா்-99408 25855 அல்லது ரா.சு.மனுஜ் ஷியாம் ஷங்கா்-86675 70609 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்குமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com