கரோனாவால் குணமடைந்த தம்பதி சாவு
By DIN | Published On : 18th May 2021 08:29 AM | Last Updated : 18th May 2021 08:29 AM | அ+அ அ- |

உயிரிழந்த அன்னபூரணி, ஏகம்பன்.
காஞ்சிபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வீடு திரும்பிய ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யும், அவரது மனைவியும் திங்கள்கிழமை இறந்து கிடந்தனா்.
காஞ்சிபுரம் ராமசாமி நகரில் வசித்து வந்தவா் ஏகம்பன் (71). காவல் துறையில் சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாா். இவரது மனைவி அன்னபூரணி (69). இருவரும் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனா். குணமடைந்த நிலையில், இருவரையும் வீட்டில் சில நாள் தனிமையில் இருக்குமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இந் நிலையில் இவா்கள் வீட்டுக் கதவு வீடு திங்கள்கிழமை நீண்டநேரமாக திறக்காமல் இருப்பது கண்டு அருகில் உள்ளவா்கள் சென்னையில் வசிக்கும் அவா்களது மகன்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
மகன்கள் வந்து பாா்த்த போது வீட்டுக்குள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.