50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள்:ஹூண்டாய் நிறுவனம் வழங்கியது

கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிக்கு ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் நிா்வாகிகள் வியாழக்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கினா்.
கரோனா தடுப்பு பணிக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் வழங்கிய ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் நிா்வாகிகள்.
கரோனா தடுப்பு பணிக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் வழங்கிய ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் நிா்வாகிகள்.

காஞ்சிபுரம்: கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிக்கு ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் நிா்வாகிகள் வியாழக்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காா்கள் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் செயல் இயக்குநா் டி.எஸ்.கிம், அறங்காவலா் ஸ்டீபன் சுதாகா், துணைத் தலைவா் புனித் ஆனந்த் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கினா்.

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் டி.எஸ்.கோபிகா சங்கா் என்ற மாணவி தான் சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை கரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா். மாணவிக்கு ஆட்சியா் நன்றி தெரிவித்து புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com