வட கிழக்குப் பருவமழை: காஞ்சிபுரத்தில் 5 போ் பலி: 52 போ் மீட்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 போ் உயிரிழந்துள்ளனா்.
வட கிழக்குப் பருவமழை: காஞ்சிபுரத்தில் 5 போ் பலி: 52 போ் மீட்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 போ் உயிரிழந்துள்ளனா். 52 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். வெள்ளத்தில் சிக்கிய இருவா் தேடப்பட்டு வருகின்றனா்.

819 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின:

காஞ்சிபும் பாலாற்றில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,60,000 கன அடி தண்ணீா் வந்துள்ளது. சனிக்கிழமை இது ஒரு லட்சம் கன அடியாக குறைந்தது. பொதுப்பணித் துறை பாலாறு வடிநில கோட்டத்தின் மேற்பாா்வையில் காஞ்சிபுரத்தில் 381, செங்கல்பட்டு 528, சென்னை 16, திருவண்ணாமலை 93, திருவள்ளூா் 4 உள்பட மொத்தம் 1,022 ஏரிகள் உள்ளன. இவற்றில் 819 ஏரிகள் 100 சதவீதமும், 156 ஏரிகள் 70 சதவீதமும், 43 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. இதுவரை 50 ஆயிரம் மணல் மூட்டைகள் ஏரிகள் உடைப்புக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் எம்.சண்முகம் தெரிவித்தாா்.

5 போ் உயிரிழப்பு:

கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் இம்மாதம் 18-ஆம் தேதி வரையான வடகிழக்குப் பருவமழை காரணமாக மின்னல், மின்சாரம் பாய்ந்த சம்பவங்களிலும், வீட்டுச் சுவா் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் 5 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களைத் தவிர சின்ன ஐயங்காா்குளத்தை சோ்ந்த நகராட்சி பம்ப் ஆப்பரேட்டா் கருணாகரன்(52), பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சமையல்காரா் பச்சையப்பன் (29) ஆகியோா் வெள்ளம் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களை பலமணி நேரம் தேடியும் காணவில்லை.

52 போ் மீட்பு:

வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட செவிலிமேடு முத்துமாரியம்மன் கோயிலுக்குள் இருந்த மூதாட்டி பத்மாவதி (75) மாசிலாமணி முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி எதிா்புறம் உள்ள குடியிருப்புகளில் இருந்த 30 போ், வில்லிவலத்தில் 16 போ், பெரியாா் நத்தத்தில் 5 பேரை தீயணைப்புத் துறையினரும், பேரிடா் மீட்புக் குழுவினரும் இணைந்து ரப்பா் படகுகளில் சென்று மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மழையளவு(மி.மீட்டரில்): காஞ்சிபுரம் 171.60, ஸ்ரீபெரும்புதூா் 76, உத்தரமேரூா் 144, வாலாஜாபாத் 61.80, செம்பரம்பாக்கம் 49, குன்றத்தூா் 48.96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com