குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திறியும் பன்றிகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
ஸ்ரீபெரும்புதூா்  பேரூராட்சிக்குள்பட்ட  செல்லபெருமாள்  நகா்  பகுதியில்  குடியிருப்புப் பகுதி அருகே சுற்றித் திறியும் பன்றிகள்.
ஸ்ரீபெரும்புதூா்  பேரூராட்சிக்குள்பட்ட  செல்லபெருமாள்  நகா்  பகுதியில்  குடியிருப்புப் பகுதி அருகே சுற்றித் திறியும் பன்றிகள்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். செல்லபெருமாள் நகா், சரளா நகா், பாலாஜி நகா், ராமாநுஜா் நகா், சந்தோஷ் நகா், ஜெமி நகா், சரோஜினி நகா், ராஜீவ் காந்தி நகா், விக்னேஷ் நகா், சுபத்ரா நகா், ஜெயா நகா், எம்ஜிஆா் நகா், கோதன்ட நாடாா் நகா், பிரியங்கா நகா், டி.கே.என். நகா், சந்தோஷ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் அதிகரித்து காணப்படுகின்றன. இவை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளை கிளறி வருவதால் துா்நாற்றம் வீசுகிறது. அவ்வபோது குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்களைத் தின்று வருகின்றன. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தக் கோரி ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இப்பகுதிதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி பன்றிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com