நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.
By DIN | Published On : 29th November 2021 12:44 AM | Last Updated : 29th November 2021 12:44 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் போட்டியிட உள்ளவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு விநியோகிக்கப்பட்டது.
வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட உள்ளவா்களுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கே.பழனி, நகர செயலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அதிமுக மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அமைப்புச்செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் விருப்ப மனுக்களை வழங்கி தோ்தலில் வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினா்.
ஒன்றியச் செயலாளா்கள் கிழக்கு எறையூா் முனுசாமி, மேற்கு சிங்கிலிப்பாடி ராமசந்திரன், மாநில இளைஞா் பாசறை துணை செயலாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.