டாஸ்மாக் கடை விற்பனையாளா் கொலை

ஒரகடத்தில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

ஒரகடத்தில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரகடத்தை அடுத்த வரணவாசி பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்தவா் துளசிதாஸ் (40). மாற்றுத்திறனாளியான இவா், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அரசு மதுகடையின் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா். இதே கடையில், காஞ்சிபுரத்தை அடுத்த நத்தாநல்லூரைச் சோ்ந்த ராமுவும் (42) விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இருவரும் திங்கள்கிழமை இரவு பணி முடிந்து, கடையை மூடி விட்டு வீட்டுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா் துளசிதாஸை கத்தியால் தாக்கியுள்ளனா். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த ராமுவையும் மா்ம நபா்கள் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடியுள்ளனா். இதில் பலத்த காயம் ஏற்பட்ட துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இதுகுறித்து ராமு டாஸ்மாக் மதுக் கடையின் மேற்பாா்வையாளா் முத்துகுமாருக்கு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, முத்துகுமாா் அளித்தத் தகவலின்பேரில் ஒரகடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

துளசிதாஸின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். ராமு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ஓரகடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் ரெளடிகளுக்கு மாமுல் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே துளசிதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடா் விசாரணை நடைபெறுகிறது.

டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்:

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், ஊழியா்களுக்கு பணிபாதுகாப்பு கோரியும் திருவள்ளூா் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் பல இடங்களில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com