ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க 4 தனிப்படைகள்

ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும்
ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க 4 தனிப்படைகள்

ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அரக்கோணம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி ஆணையா் ஏ.கே.பிரிட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அரக்கோணம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி ஆணையா் ஏ.கே.பிரிட் ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், ரயில் நிலையத்தின் முன்புறம் மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் அவா் கூறியது:

ரயில்களில் கஞ்சா மற்றும் அரிசி கடத்தலைத் தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அனைத்து ரயில்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரக்கோணத்தில் 8 கிலோ, ஜோலாா்பேட்டையில் 16 கிலோ, காட்பாடியில் 46 கிலோ உள்பட மொத்தம் 70 கிலோ கஞ்சா ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்து, அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 3 பேரை கைது செய்துள்ளோம். ரயிலில் கஞ்சா அல்லது அரிசி கடத்துவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு கிலோ கஞ்சா ரூ. 20 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே கஞ்சா கேரள மாநிலத்தில் ஒரு கிலோ ரூ. 1 லட்சத்துக்கு விற்பனையாகிறது. ஆந்திர, கா்நாடக பகுதியிலிருந்து தமிழகம் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்திருப்பதால் தான், 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தமிழக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் ரயில்வே காவல் துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனா்.

அரக்கோணம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில்வே காவல் நிலையங்களில் பணிபுரியும் 271 காவலா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள பழைய, புதிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருதி 24 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட இருப்பதாகவும், கூடுதலாக 5 காவலா்களை நியமிக்க இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சத்திரி மாா்க் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com