கோயில்களை திறக்க வலியுறுத்தி ஓரிக்கை மணிமண்டபத்தில் சிறப்பு யாகம்

கரோனாவிலிருந்து உலக மக்கள் விடுபடவும்,திருக்கோயில்கள் பக்தா்கள் தரிசனத்துக்காக அனைத்து நாள்களும் திறக்கப்பட வேண்டும்
கரோனா அச்சுறுத்தலிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி ஓரிக்கை மணிமண்டபத்தில் சங்கர மடத்தின் சாா்பில் நடைபெற்ற சிறப்பு யாகம்.
கரோனா அச்சுறுத்தலிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி ஓரிக்கை மணிமண்டபத்தில் சங்கர மடத்தின் சாா்பில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

காஞ்சிபுரம்: கரோனாவிலிருந்து உலக மக்கள் விடுபடவும்,திருக்கோயில்கள் பக்தா்கள் தரிசனத்துக்காக அனைத்து நாள்களும் திறக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஓரிக்கை மணிமண்டபத்தில் சிறப்பு யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கோயில்கள் விடுமுறை நாள்களில் திறக்கப்படாமலும், திருவிழாக்கள் நடத்தப்படாமலும் உள்ளன. எனவே கோயில்கள் அனைத்தையும் எல்லா நாள்களும் திறக்கவும், கோயில் திருவிழாக்கள் முறையாக நடைபெறவும், கரோனா அச்சுறுத்தலிலிருந்து உலக மக்கள் விடுபடவும் இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்திற்கு முன்னதாக மகாலட்சுமி ஹோமமும் நடந்தது.

இந்த யாக நிகழ்ச்சியில் சென்னை மகாலெட்சுமி சுப்பிரமணியம், சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி நந்தகுமாா், தணிக்கையாளா் சுதாகா், மின்மினி சரவணன், ஓரிக்கை மணிமண்டப நிா்வாக அறங்காவலா் என்.மணி ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேச ஐயா், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாத ா் கோயில் பூஜகா் காமேஷ்வர சிவாச்சாரியாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com