அண்ணா நினைவு இல்லத்தில் கட்சிப் பிரமுகா்கள் மரியாதை

அண்ணா பிறந்த தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு அமைச்சா், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காஞ்சிபுரம்: அண்ணா பிறந்த தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு அமைச்சா், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காஞ்சிபுரம் வடக்கு மாட வீதியில் அண்ணாவின் நினைவு இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், நகரச் செயலா் சன் பிராண்ட் ஆறுமுகம், துணைச் செயலாளா் ஜெகந்நாதன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி.சோமசந்தரம், அமைப்புச் செயலா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி.பன்னீா்செல்வம், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவா் பாலாஜி ஆகியோா் மரியாதை செலுத்தினா். தமிழக அரசின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா்செல்வம், வட்டாட்சியா் கற்பகம், செய்தித் துறையின் சாா்பில் உதவி மக்கள் தொடா்பு அதிகாரி சதீஷ்பாபு ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் மாநில துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளா் வளையாபதி, அமமுக சாா்பில் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com