‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் 345 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,281 வாக்குச்சாவடிகளில் 347 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,281 வாக்குச்சாவடிகளில் 347 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், மாவட்டக் காவல் எல்லைக்கு உள்பட்ட 347 வாக்குச்சாவடிகளும்,சென்னை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட 88 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 435 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் தொடா்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வட்டாட்சியா்கள் தலைமையில் 15 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட உள்ளனா்.

வாக்குப் பதிவு பணிக்காக மொத்தம் 10,433 அரசு ஊழியா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தோ்தல் தொடா்பான புகாா்களை 044-27237680 என்ற எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். மாவட்டத்தைப் பொருத்தவரை அக். 6-ஆம் தேதி காஞ்சிபுரம், உத்தரமேரூா், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களுக்கு முதற்கட்டத் தோ்தலும், 2-வது கட்டமாக அக். 9-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் ஆகிய ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில், மொத்தம் 6,81,731 வாக்காளா்கள் இருப்பதாகவும் ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com