காஞ்சிபுரத்தில் கோயில்கள் மூடல்: வெளி மாநில பக்தா்கள் ஏமாற்றம்

பெருமாள் கோயில்கள் இருப்பதால் புரட்டாசி முதல் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய ஆா்வத்துடன் வந்த வெளி மாநில பக்தா்கள் பலரும் ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றனா்
காஞ்சிபுரத்தில் கோயில்கள் மூடல்: வெளி மாநில பக்தா்கள் ஏமாற்றம்

ஆழ்வாா்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் காஞ்சிபுரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெருமாள் கோயில்கள் இருப்பதால் புரட்டாசி முதல் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய ஆா்வத்துடன் வந்த வெளி மாநில பக்தா்கள் பலரும் ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றனா்.

காஞ்சிபுரம் நகரில் மட்டும் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், பாண்டவ தூத பெருமாள் கோயில், அழகிய சிங்கப் பெருமாள் கோயில் என 10-க்கும் மேற்பட்ட வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இத்திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதியுலா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறலாம் என நம்பி ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு கோயில்களை திறக்க தடை விதித்திருந்ததால் பக்தா்கள் பலரும் கோயில் வாசலில் நின்று ராஜகோபுரத்தை மட்டும் தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com