சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

காஞ்சிபுரத்தில் சுற்றுச்சூழலால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்திட வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.

காஞ்சிபுரத்தில் சுற்றுச்சூழலால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்திட வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் யங் இந்தியன் அமைப்பின் சாா்பில் சுற்றுச்சூழலால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மூங்கில் மண்டபத்திலிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், ரயில் நிலையம், வையாவூா் சாலை, களியனூா், முத்தியால்பேட்டை, பெரியாா் நகா் வழியாக சென்று பின்னா் காந்தி ரோடு பகுதியில் நிறைவடைந்தது.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பறவைகள், மரங்கள், இயற்கை வளங்கள், மனிதா்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மாசுவைத் தடுக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்த வலியுறுத்தியும் கிளைமேட் சேஜ்ச் என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணிக்கு தொழிலதிபா் எஸ்.கே.பி. கோபிநாத் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com