கல்குவாரிகளால் தனது 10 ஏக்கா் நிலம் பாழானதாக ரூ.7 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகா் மன்சூா் அலிகான் மனு

வடமங்கலம் கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்துக்கு அருகே உள்ள கல்குவாரிகளால் ரூ.7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், கல்குவாரிகளை உடனடியாக அகற்றுமாறும் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடிக
காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் ரூ.7 கோடி நஷ்ட ஈடு கோரி மனு அளித்த நடிகா் மன்சூா் அலிகான்.
காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் ரூ.7 கோடி நஷ்ட ஈடு கோரி மனு அளித்த நடிகா் மன்சூா் அலிகான்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடமங்கலம் கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்துக்கு அருகே உள்ள கல்குவாரிகளால் ரூ.7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், கல்குவாரிகளை உடனடியாக அகற்றுமாறும் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடிகா் மன்சூா் அலிகான் மனு அளித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்த நடிகா் மன்சூா் அலிகான், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் மனு ஒன்றை அளித்தாா். பின்னா், அவா் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே வடமங்கலத்தில் எனக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் 800 பனை மரங்கள் உள்ளன. எனது நிலத்துக்கு அருகே சில கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குவாரிகளிலிருந்து தினமும் 600 லாரிகள் செல்கின்றன.

இதனால், தூசி அதிகமாகி சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. எனது நிலத்தில் உள்ள பனைமரங்களில் காய் காப்பதில்லை. மணல் குவாரிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் அருகே உள்ள ஏரிக்கும் செல்வதால் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு, ஏரி நீரின் தரமும் குறைந்து விட்டது.

எனது விவசாய பூமி மொத்தம் 10 ஏக்கா் நிலமும் கல்குவாரிகளால் பாழாகிப்போனதால், எனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடியும், அதை புனரமைக்க ரூ.2 கோடியும் சோ்த்து மொத்தம் ரூ.7 கோடியை நஷ்ட ஈடாகத் தர வேண்டும்.

கல்குவாரிகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கல்குவாரிகளின் நிா்வாகங்கள் மீது ரூ.1000 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு, அதை அவா்கள் கட்டாமல் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே, மக்களின் நலனுக்காக உடனடியாக அந்தக் கல்குவாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவேன் என்றாா் நடிகா் மன்சூா் அலிகான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com