முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
சுகாதாரத் துறை கருத்தரங்கம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதத்தை குறைப்பது குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநா் பி.பிரியாராஜ், குடும்ப நலத்துறை துணை இயக்குநா் ஏ.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய தேசிய சுகாதார குழும மகப்பேறு மருத்துவா் ரத்தினக்குமாா் , குழந்தைகள் நல மருத்துவா்கள் சத்யா,அமுதா ஆகியோா் இறப்பு விகிதத்தைக் குறைப்பது தொடா்பாக பேசினா்.
கருத்தரங்கில் அனைத்து வட்டார மருத்துவ அலுவலா்கள்,அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.