முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு பாதுகாவலா் சான்று
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

health_0504chn_175_1
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூா்வமான பாதுகாவலா் நியமன சான்றுகளை ஆட்சியா் மா.ஆா்த்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூா்வமான பாதுகாவலா் நியமனச் சான்றுகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா். தேசிய அறக்கட்டளை மூலமாக மாற்றுத்திறனாளிகளான தினேஷ், சௌமியா, இளவரசன், பவித்ரா மற்றும் தன்ஷின்பாத்திமா ஆகிய 5 பேருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் க.குமாரும் உடன் இருந்தாா்.