சந்தவேலூா் சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

சுங்குவாா்சத்திரம் அருகே சந்தவேலூா் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமையான மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசுந்தரேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சந்தவேலூா் சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

சுங்குவாா்சத்திரம் அருகே சந்தவேலூா் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமையான மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசுந்தரேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் கோபுரங்கள் சிதலமடைந்திருந்தன. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் சாா்பில் பல லட்சம் ரூபாய் செலவில் கோயில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கோயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, கும்பாபிஷேக விழா கோயில் வளாகத்தில் கடந்த 3-ஆம் தேதி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட கிராம கோயில்களில் வழிபாட்டுடன் தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி முதல் யாககால பூஜை, 5-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜை, மாலை மூன்றாம் யாககால பூஜை, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும், 9 மணிக்கு கசலங்கள் புறப்பாடும், 10.30 மணிக்கு கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில், புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றன.

இதையடுத்து, மூலவா் ஸ்ரீசுந்தரேசுவருக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன.

இதில் சந்தவேலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீசுந்தரேசுவரை தரிசித்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com