மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
பதக்கம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ். உடன் பயிற்சியாளா் பாபு.
பதக்கம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ். உடன் பயிற்சியாளா் பாபு.

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் காஞ்சி ஸ்கேட்டிங் அகாதெமியில் பயிற்சி பெற்று வந்த 15-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் திண்டுக்கல்லில் தனியாா் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டனா். தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் 5 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 5 பேரும், 6 வயது முதல் 8 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 6 பேரும் கலந்து கொண்டனா். 8 முதல் 10 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 5 பேரும் கலந்து கொண்டனா். இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 10 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனா்.

பதக்கம் பெற்ற மாணவா்கள் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜை சந்தித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் காட்டி வாழ்த்து பெற்றனா். ஸ்கேட்டிங் பயிற்சியாளா் பாபு, துணை பயிற்சியாளா் ஆனந்த் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com