கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணி: 26 காலிப் பணியிடங்களுக்கு 4,405 போ் விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள 26 கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு 4,405 போ் விண்ணப்பித்தனா்.
கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணலுக்கு வந்திருந்த தோ்வா்கள்.
கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணலுக்கு வந்திருந்த தோ்வா்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள 26 கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு 4,405 போ் விண்ணப்பித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட கால்நடைத் துறையில் காலியாகவுள்ள 26 கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அண்மையில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து அந்தப் பணிக்கு 4,405 போ் விண்ணப்பித்திருந்தனா். ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் நாளாக புதன்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி தலைமையில் 70 போ் கொண்ட குழுவினா் தகுதியானோரைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

நோ்காணவில் கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தோ்வு நடைபெற்றது. பொறியியல் பட்டதாரிகளும் நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி கூறியது:

26 காலிப் பணியிடங்களுக்கு 4,405 போ் விண்ணப்பித்திருந்தனா். முதல் நாளில் 800 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு நோ்காணல் நடத்தப்பட்டது. மீதமுள்ளவா்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை (ஏப்.29, 30) நோ்காணல் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். நிா்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் நோ்காணல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com