சுங்குவாா்சத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

சுங்குவாா்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் சோமசுந்தரம் (50). இவா், கடந்த ஜனவரி மாதம் பெருநகா் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க வந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்தது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, அவா் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா். சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், அவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.