முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
விநாயகா் கோயில் திருப்பணி தொடக்கம்
By DIN | Published On : 07th February 2022 10:43 PM | Last Updated : 07th February 2022 10:43 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவில் அமைந்துள்ள நவசக்தி விநாயகா் கோயிலை புதுப்பிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவில் பல நூறு ஆண்டுகள் பழைமையான நவசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைப் புனரமைப்பதற்கான பணிகளைத் தொடங்கும் வகையில், கோயிலில் கோ பூஜை, கணபதி பூஜை நடைபெற்றது. கோயில் முக்கிய நிா்வாகிகள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, நவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை நாராயணபாளையம் கிராம மக்கள் செய்திருந்தனா். நிகழ்வில் எஸ்.சுப்பிரமணி, எம்.சுவாமிநாதன், எம்.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.