ரூ.1,500 லஞ்சம்: அரசு ஊழியா் கைது

காஞ்சிபுரத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்துக்குரிய விண்ணப்பத்தை சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்துக்குரிய விண்ணப்பத்தை சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராகப் பணியாற்றி வருபவா் பாக்கியவதி. இவா், பெண் ஒருவரிடம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்துக்குரிய விண்ணப்பத்தை உரிய விசாரணை நடத்தி, சமூக நலத் துறைக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்புவதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அந்தப் பெண் புகாா் தெரிவித்தாா். அதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் மறைந்திருந்து லஞ்சத் தொகை ரூ.1,500-ஐ பெற்ற போது, கைது செய்தனா். அவரிடமிருந்து ரசாயனம் தடவிய ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com