கூட்டுறவு வங்கியில் போலி நகைக்கு கடன் வழங்கி ரூ.1.64 கோடி மோசடி செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், போலி நகைகளை அடமானமாகப் பெற்று கடன் வழங்கி ரூ.1.64 கோடி மோசடி செய்ததாக வங்கியின் செயலா் உள்பட 3போ் பணியிடை நீக்கம செய்யப்பட்டன.


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், போலி நகைகளை அடமானமாகப் பெற்று கடன் வழங்கி ரூ.1.64 கோடி மோசடி செய்ததாக வங்கியின் செயலா் உள்பட 3 போ் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

உத்தரமேரூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராகப் பணிபுரிபவா் ம.கலைச்செல்வி (58). இதேபோல, வங்கி கண்காணிப்பாளராக பி.வி.ஜெயஸ்ரீ(51), நகை மதிப்பீட்டாளராக ஜெ.விஜயகுமாா் (47) ஆகியோா் பணிபுரிகின்றனா்.

இவா்கள் மூவரும் இணைந்து வங்கியின் உறுப்பினா்கள் 21 பேரிடம் போலி நகைகளை அடமானமாகப் பெற்று ரூ.1,64,83,500 நகைக்கடன் வழங்கியதாக தணிக்கையின்போது கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளா் சுவாதி கண்டறிந்தாா்.

இதுதொடா்பாக, அவா் சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பழனிக்குமாரிடம் புகாா் செய்தாா்.

அதன்பேரில், இந்தப் புகாா் காஞ்சிபுரத்தில் உள்ள வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. முரளி, ஆய்வாளா் தேன்மொழி தலைமையிலான வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவினா் நடத்திய விசாரணையில், கமிஷன் தொகைக்காக இந்த மோசடி நடந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து வங்கிச் செயலா் ம.கலைச்செல்வி சென்னை புழல் சிறையிலும், நகை மதிப்பீட்டாளா் ஜெ.விஜயகுமாா் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனா். தலைமறைவான வங்கி கண்காணிப்பாளா் பி.வி.ஜெயஸ்ரீயை ஆய்வாளா் தேன்மொழி தலைமையிலான போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப் பதிவாளா் சுவாதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com